×

செங்கோட்டையன் உறுதி ஆசிரியர்களின் இடர்பாடு களையப்படும்

திருப்பூர்: 10 மற்றும் 12ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற திருப்பூர் மாவட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: ஆசிரியர்கள் மத்தியில் வருத்தங்கள் உள்ளன. அதனை அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. அவை விரைவில் களையப்படும். ஆசிரியர்களுக்கு சில இடர்பாடுகள் இருக்கலாம். அவற்றையும் விரைவில் களைவோம். மாணவர்களை சிறந்த கல்வியாளர்களாக ஆக்கும் திட்டங்களை அரசு தீட்டும். ஆனால் அந்த திட்டம் வெற்றிபெற ஆசிரியர்களே காரணம்.  இவ்வாறு அவர் பேசினார்.

Tags : teachers ,Senkotayan , Sengottaiyan, Teacher, Disadvantaged
× RELATED ஈரோடு மாநகராட்சி செயற்பொறியாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி