மோசமான குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: ஐஎன்எஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 22ம் தேதி ஜாமீன் வழங்கியது. எனினும், அமலாக்கத்துறையின் நிதி மோசடி வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ளதால் அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ப.சிதம்பரம் இடைக்கால ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இதற்கு அமலாக்கத்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அமலாக்கத்துறை நேற்று தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘எங்கள் விசாரணையில் சிதம்பரமும் அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் நிதிமோசடியில் ஈடுபட்டதற்காக ஆதாரங்கள் கிடைத்துள்ளன. தனிப்பட்ட ஆதாயத்துக்காக சிதம்பரம் தனது அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார். மிக மோசமான குற்றத்தில் அவர் ஈடுபட்டுள்ளதால் அவர் நிவாரணம் பெற உரிமை இல்லை. அவருக்கு ஜாமீன் வழங்கினால் அது ஊழல் வழக்குகளில் தவறான முன்மாதிரியை ஏற்படுத்தும். இதனால் சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ளது.


Tags : Bureau of Investigation Bail ,Chidambaram Bureau of Investigation Bail ,Chidambaram , Chidambaram, Bail, Enforcement Department, Opposition
× RELATED ஜனநாயக பட்டியலில் சரிவு இந்தியாவுக்கு அபாய ஒலி ப.சிதம்பரம் எச்சரிக்கை