×

தாசில்தாரை தாக்கிய பாஜ எம்எல்ஏ.க்கு 2 ஆண்டுகள் சிறை: பதவி பறி போகிறது

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் ராய்பூரா நகரில் மணல் கடத்தி சென்ற டிராக்டரை மடக்கி பிடித்து விசாரித்த தாசில்தாரை, பவாய் சட்டப்பேரவைத் தொகுதியின் பாஜ எம்எல்ஏ. பிரகலாத் லோதி தாக்கினார். இதையடுத்து அவர் மீது வன்முறை, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன்படி, எம்எல்ஏ. ஒருவருக்கு 2 ஆண்டுகள் அல்லது அதற்கு கூடுதலாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் அவர் தனது எம்எல்ஏ பதவியை இழக்க கூடும் என்று கடந்த 2013ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, `தாசில்தாரை தாக்கிய விவகாரத்தில் பிரகலாத் லோதிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் ₹. 2,000 அபராதம் விதிக்கப்படுகிறது’ என தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து, லோதியின் எம்எல்ஏ பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. தீர்ப்பின் நகல் கிடைத்ததும் அவரை சட்டப்படி நீக்குவதற்கான பணிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஜாபுவா இடைத்தேர்லில் காங்கிரஸ் வேட்பாளர் காண்டிலால் புரியா,

பாஜவை சேர்ந்த பானு புரியாவை விட 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், எம்எல்ஏ ஒருவரின் பதவி பறிபோக இருப்பது, பாஜ.வுக்கு 2வது பின்னடைவாக கருதப்படுகிறது.

Tags : BJP MLA ,jail , Baja MLA., 2 years jail
× RELATED குஜராத்தில் பாஜவுக்கு எதிர்ப்பு...