தீவிரவாதிகள் தாக்குதல் 53 ராணுவ வீரர்கள் பலி

பமாகோ: மாலி நாட்டில் ராணுவ முகாம் மீது நேற்று நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 53 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், மேனகா பகுதியில் உள்ள ராணுவ முகாமிற்குள் நேற்று நுழைந்த தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 53 ராணுவ வீரர்களும், பொது மக்களில் ஒருவரும் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக இந்நாட்டு தகவல் தொடர்பு துறை அமைச்சர் யாயா சாங்கரே வெளியிட்ட டிவிட்டர் பதிவில், நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  முகாமில் இருந்தவர்களில் 10 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது, என கூறியுள்ளார்.

Tags : army soldiers , Terrorists attack, soldiers, kills
× RELATED ஜம்மு-காஷ்மீர் ரஜோரி பகுதியில்...