×

அமெரிக்காவுக்கு டாலர் கடத்த முயன்றவர் கைது

சென்னை: சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் பாட்ரிக் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. பயணிகள் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த தமீம் அன்சாரி (26), சுற்றுலா பயணிகள் விசாவில் கோலாலம்பூர் செல்ல வந்தார். அதிகாரிகள் நடத்திய சோதனையில், சூட்கேஸின் ரகசிய அறையில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் இருந்தது.அதன் இந்திய மதிப்பு ₹9.5 லட்சம். அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். தமீம் அன்சாரியையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags : US , Arrested, trying , smuggle dollar, US
× RELATED அமெரிக்க நாட்டு இரு அமைச்சர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு