×

மரியாதைக்குரிய விருது: மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் நன்றி

சென்னை: கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருதை மத்திய அரசு வழங்குகிறது. இதற்கு ரஜினிகாந்த்  நன்றி தெரிவித்துள்ளார். ‘சர்வதேச இந்திய திரைப்பட பொன்விழா ஆண்டில், மரியாதைக்குரிய விருதை எனக்கு அளித்திருக்கும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினி குறிப்பிட்டுள்ளார். சர்வதேச இந்திய திரைப்பட குழுவினருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கு சினிமாவுக்கான சிறப்பு விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. கோவாவில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் இவ்விருது வழங்கப்படுகிறது. இதையொட்டி ரஜினிகாந்துக்கு தமிழ் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘’சர்வதேச திரைப்பட விழாவில், ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி விருது பெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள். இந்த விருதுக்கு நீங்கள் மிகவும் தகுதியானவர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தலைவர்கள் வாழ்த்து: ரஜினிகாந்த்துக்கு சினிமாவிற்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்குமுன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,  தமாகா தலைவர் ஜி.கே.வாசன்ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.நடிகை ராதிகா, குஷ்பு, நடிகர்கள் ஜெயம் ரவி, விவேக், சூரி, இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், ஆர்.வி.உதயகுமார் உள்பட பல நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து தரப்பினருக்கும் நேற்று மாலை ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பதிவில் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags : Rajinikanth ,government , Honorable Mention, Rajinikanth ,thanks, central government
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...