மு.க.ஸ்டாலினுடன் எச்.ராஜா திடீர் சந்திப்பு

சென்னை: மு.க.ஸ்டாலினை, எச்.ராஜா நேற்று சந்தித்து பேசினார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று காலை திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சிறிது நேரம் நீடித்தது.அப்போது, எச்.ராஜா தனது மகள் திருமண அழைப்பிதழை அளித்து திருமணத்தில் பங்கேற்குமாறு மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று மு.க.ஸ்டாலினும், திருமணத்திற்கு வருவதாக சம்மதம் தெரிவித்தார். பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மகள் திருமணம் வருகிற 15ம் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : H. Raja ,meeting ,MK Stalin , H. Raja's sudden meeting with MK Stalin
× RELATED பல கட்டமாக உள்ளாட்சி தேர்தல்...