×

நடிகர் சங்க விவகாரத்தில் தலையிடும் பதிவுத்துறை அதிகாரிகளை கண்டித்து நடிகர்கள் போராட்டம்: முதல்வரிடம் புகார் அளிக்கவும் முடிவு

சென்னை: நடிகர் சங்க விவகாரத்தில் தலையிடும் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளை கண்டித்து சினிமா நடிகர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். நடிகர் சங்கத்தின் தலைவராக தற்போது விஷால் உள்ளார். அவரது பதவிக்காலம் முடிந்தது. இதனால் நடிகர் சங்கத்துக்கான தேர்தல் நடந்தது. ஆனால் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்று எதிர்தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் முடிவுகளை வெளியிடக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்தநிலையில், நடிகர் சங்கம் முறையாக சங்கப் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. ஆனால் சங்கம் விதிமுறைப்படி செயல்படவில்லை என்று பத்திரப்பதிவுத்துறை உதவி ஐஜி ரவீந்திரநாத் அறிவித்து, சங்க பதிவை ரத்து செய்தார்.

இதை எதிர்த்து விஷால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதற்கு முழு உதவியாக அப்போது பத்திரப்பதிவுத்துறை ஐஜி பதவியை கூடுதலாக கவனித்து வந்த தற்போதைய வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை செயலாளர் பாலச்சந்திரன் என்று கூறப்படுகிறது.இதனால், பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக தேவையில்லாமல் நடிகர் சங்க விவகாரத்தில் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் மீது நடிகர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.இதனால் பத்திரப்பதிவு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மனு கொடுப்பது, உண்ணாவிரதம் உள்ளிட்ட அறப்போராட்டங்களில் ஈடுபடுவது குறித்து நடிகர் சங்க நிர்வாகிகள் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஓரிரு நாளில், அதிகாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Actors ,registration officers ,actor ,CM Actors 'Affair ,CM , Actors' struggle,registration ,interfering in actor's affairs, Report,CM
× RELATED தென்னிந்திய நடிகர் சங்க கட்டத்திற்கு...