×

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை டிசம்பர் 31ம் தேதி வரை மேற்கொள்ள வேண்டும்

* ஒப்பந்த நிறுவனங்களுக்கு பொதுப்பணித்துறை அறிவுரை
* வாரம் ஒரு முறை அறிக்கை அளிக்க அரசு உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை டிசம்பர் 31ம் தேதி வரை மேற்கொள்ள வேண்டும் என்று ஒப்பந்த நிறுவனங்களுக்கு பொதுப்பணித்துறை அறிவுரை வழங்கியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை ஓட்டி செப்டம்பர் முதல்வாரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இந்தாண்டு கடந்த செப்டம்பர் 13ம் தேதி தான் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ₹7.65 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் பருவமழை தூர்வாரும் பணிக்கு குறுகிய கால டெண்டர் விட்டு, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்தது.தொடர்ந்து ஒப்பந்த நிறுவனம் சார்பில் அக்டோபர் 2வது வாரம் முதல் பணிகளை தொடங்கியது. இந்த பணிகளை தினமும் கண்காணிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், உதவி செயற்பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தினமும் மேற்கொண்டு வரும் பணிகளை புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும். இதற்காக, வாட்ஸ் அப் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், தினமும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ஒப்பந்த நிறுவனங்களின் மேற்கொண்டு வரும் பணிகளை அறிக்கையாக தயார் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே மிதவை இயந்திரம், பொக்லைன் இயந்திரம் வாடகைக்கு வாங்கி இறக்கி பணிகளை செய்ய ேவண்டும். இல்லையெனில் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மண்டல நீர்வளப்பிரிவு தலைமை பொறியாளர் அசோகன் உத்தரவையடுத்து தற்போது ஜேசிபி, மிதவை இயந்திரத்தை வாடகைக்கு பெற்று கால்வாய்களில் ஆகாயத்தாமரை செடி, குப்பைகளை அகற்றுவது, பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாய்கள், அடையாறு, கூவம் முகத்துவாரங்களில் தண்ணீர் செல்ல வசதியாக மணல் மேடுகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 17ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த பருவமழை காரணமாக கால்வாய்களில் தண்ணீர் தடையில்லாமல் செல்ல ஏதுவாக பணிகளை தீவிரப்படுத்த ஒப்பந்த நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை டிசம்பர் 31ம் தேதி வரை மேற்கொள்ள வேண்டும், இல்லையெனில் பில் தொகை செட்டில் செய்யப்படாது என்று ஒப்பந்த நிறுவனங்களுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags : monsoon , Northeast monsoon,precautionary , should, taken until 31 December
× RELATED கடந்த 7 ஆண்டுகளாக கூடுதல் மழை பெய்தும் கண்மாய்களில் தண்ணீர் இல்லை