×

12ம் வகுப்பு பயிலும் மாணவருக்கு கல்வி உதவி தொகை: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: 12ம் வகுப்பு பயிலும் மாணவருக்கு கல்வி உதவி தொகையை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த பெரவள்ளூர், திருவிகநகர் 19வது தெரு, எண்.498ல் குடியிருந்து வரும் சுந்தரமூர்த்தி, தனது மகன் பெரியார் நகர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12ம் வகுப்பில் படித்து வருவதாகவும், தனது ஏழ்மை நிலை காரணமாக தனது மகன் எஸ்.நவீன்குமாருக்கு கல்வி உதவித் தொகை வழங்கிட வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம், கோரிக்கை மனு அளித்தார். அவரது கோரிக்கையை ஏற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் 12ம் வகுப்பு பயிலும் எஸ்.நவீன்குமாருக்கு கல்வி உதவித் தொகை அளித்தார்.அதே போல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 23ம் தேதி கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொளத்தூர், பூம்கார் நகர் 11வது குறுக்குத் தெரு, எண்.16/1-ல் குடியிருந்து வரும் சட்ரக், தான் நீரிழவு நோயினால் பாதிக்கப்பட்டு, தனது இடது கால் அகற்றப்பட்டதாகவும், தனக்கு செயற்கை கால் வழங்கி உதவிட வேண்டுமென கோரிக்கை மனு அளித்தார். அவரது கோரிக்கையை ஏற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நீரிழவு நோயினால் இடது கால் அகற்றப்பட்ட சட்ரக் அவர்களுக்கு செயற்கை கால் வழங்கினார்.அப்போது சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ.,  கொளத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் ஐ.சி.எப். முரளிதரன், கொளத்தூர் மேற்கு  பகுதிக் செயலாளர் ஏ.நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.


Tags : student ,MK Stalin , Scholarship,12th grade student,MK Stalin,provided
× RELATED பள்ளிக்கு பிறகான கல்வி உதவி தொகை...