×

பள்ளிகளுக்கான கிரிக்கெட் ஹர்ஷித், தருண் அசத்தல் ஆட்டம்

சென்னை: மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான யு-16 கிரிக்கெட் போட்டி, சென்னையில் மேடவாக்கத்தில் நடந்தது. இதன் இறுதிப் போட்டியில் மாம்பலம்  ஸ்ரீஅகோபில மடம் மேனிலைப்பள்ளியும், திருமழிசை சென்னை பப்ளிக் ஸ்கூல் அணியும் மோதின. முதலில் விளையாடிய சென்னை பப்ளிக் ஸ்கூல், 40 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 207 ரன் எடுத்தது. அந்த அணியை சேர்ந்த எஸ்.ஹர்ஷித் 55 ரன், எல்.கே.தருண் 49 ரன் எடுத்தனர். ஸ்ரீஅகோபிலம் பள்ளியை சேர்ந்த வி.பிரேம்குமார் 3 விக்கெட் வீழ்த்தினார்.பிறகு விளையாடிய ஸ்ரீஅகோபிலம் பள்ளி, 37.2 ஓவரில் எல்லா விக்கெட்டையும் இழந்து 182 ரன் மட்டுமே எடுத்தது. இதனால், 25 ரன் வித்தியாசத்தில் சென்னை பப்ளிக் ஸ்கூல் அணி வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

ஸ்ரீஅகோபிலம்  பள்ளியை சேர்ந்த ஏ.அபினேஷ் 58 ரன், குருபிரசாத் 26 ரன் எடுத்தனர். சென்னை பள்ளியை சேர்ந்த எல்.கே.தருண் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.இந்த தொடரின் சிறந்த பேட்ஸ்மேனாக பி.ஹேமந்த், சிறந்த பீல்டராக எஸ்.ஆதித்யா, நம்பிக்கை வீரராக எஸ்.ஸ்ரீராம், சிறந்த ஆல் ரவுண்டராக  எல்.கே.தருண் (அனை வரும் திருமழிசை அணி மாணவர் கள்), சிறந்த பந்து வீச்சாளராக  பிரேம் குமார் (ஸ்ரீஅகோபிலம் பள்ளி), சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரராக நந்தகுமார் (ஜெனத் மெட்ரிக்) தேர்வு செய்யப்பட்டனர்.சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை பப்ளிக் பள்ளி மாணவர்களை முதல்வர் சித்ரகலா, தலைமை பயிற்சியாளர் ஹாரிங்டன் மனோகர் ஆகியோர் பாராட்டினர்.

Tags : Tarun Azad ,schools , Harshid, Tarun Azad, cricket ,schools
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...