×

விழுந்தால் கோடி, இல்லையேல் தெருக்கோடி...!

டாலர் சிட்டி என பெயலட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இவர்களில் சிலர், விரைவில் செல்வந்தராகி விடவேண்டும் என கருதி லாட்டரி சீட்டுகளை தேடி அலைகின்றனர். இதை பயன்படுத்தி, சில வியாபாரிகள், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து, திருப்பூரில் கள்ளத்தனமாக விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில் லாட்டரி விற்க தடை இருந்தும், போலீஸ் ஆசியுடன் இவற்றை விற்பனை செய்கின்றனர். திருப்பூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முகாமிட்டு, ‘‘விழுந்தால் கோடி, இல்லையேல் தெருக்கோடி...’’’ என கோஷமிட்டு, விற்கின்றனர். இதை கண்காணித்து, நடவடிக்கை எடுக்கவேண்டிய போலீசார் பதுங்குகின்றனர். காரணம், திருப்பூரில் உள்ள 3 காவல்நிலையங்களுக்கு மாதம்தோறும் தலா ₹30 ஆயிரம் மாமூல் கொடுக்கப்படுகிறது. இதை, ஆய்வாளர் முதல், கடைநிலை காவலர் வரை பங்கு பிரிக்கின்றனர். வரவேண்டிய ‘மாமூல்’ சரியாக வராவிட்டால் கேஸ் போட்டுருவேன்... என மிரட்டியே பணம் சம்பாதிக்கின்றனர். மாமூல் வெட்டப்படுவதால், லாட்டரி வியாபாரிகள் சிலர், அவ்வப்போது போலீசுக்கே கெத்து காட்டுகின்றனர்.

சோமநாதா... காப்பாத்துப்பா...!
கோவை மாநகர காவல்துறை குற்றப்பிரிவில் ஒரு உதவி கமிஷனர் நீண்ட காலமாக பணிபுரிந்து வந்தார். இவர், வசூலில் படு கில்லி. திருட்டு போன பொருட்களை இவரது டீம் மீட்டு வரும்போது, அதில் இவர் கை வைக்காமல் விடுவதில்லை. உதாரணமாக, 50 பவுன் தங்க நகை மீட்டு வரப்பட்டால், அதில் 25 பவுன் நகையை ஆட்டையைப் போட்டுவிடுவார். மீதமுள்ள 25 பவுன் மட்டுமே கணக்கில் வரும். இப்படி கணக்கில்லாமல் அடித்த காரணத்தால், தற்போது விஜிலன்ஸ் பிடியில் சிக்கியுள்ளார். திருட்டுபோன நகையை மீட்டு தருவதாக கூறி, கோவை நகைக்கடை உரிமையாளர் ஒருவரிடம் ₹2 லட்சம் மாமூல் வாங்கிவிட்டு, கை விரித்து விட்டார். அந்த நகைக்கடை உரிமையாளர் கொடுத்த புகாரின்பேரில், தற்போது இவர் விஜிலன்ஸ் வசம் மாட்டிக்கொண்டுள்ளார். இவர் மீது அடுத்தடுத்து புகார் வந்த காரணத்தால், கோவைப்புதூர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு, சென்றாலும் ‘’சனி’’ விடாமல் இவரை துரத்துகிறது. ‘’உப்பு தின்னவன் தண்ணி குடித்துதானே ஆக வேண்டும்...’’ என்ற பாணியில், விழிபிதுங்கி நிற்கிறார். சோமநாதா... காப்பாத்துப்பா.... என இவர் வேண்டாத நாளில்லை...!

ஆட்டோமொபைல் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ அறிமுகம்
மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ் கார் வரிசையில் பல்வேறு மாடல்கள் உள்ளன. இந்தியாவில் ஏற்கனவே ஏஎம்ஜி பிராண்டிலான அதிக செயல்திறனும், கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட ஜி63 என்ற மாடல் கார் விற்பனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏஎம்ஜி ஜி63 எஸ்யூவி ரகத்தில் சாதாரண வகை மாடலாக ஜி350 டீசல் மாடல் இந்தியா வந்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ்-எஸ் கிளாஸ் காரில் பயன்படுத்தப்படும் அதே 3.0 லிட்டர் டீசல் இன்ஜின்தான் இப்புதிய ஜி530டீ எஸ்யூவி ரக காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஆறு சிலிண்டர்கள் அமைப்புடைய டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 282 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது.
இப்புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ காரில், 9ஜி டிரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு, இன்ஜின் சக்தி 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. இந்த மாடலானது மணிக்கு 199 கிமீ வேகம் வரை செல்லும். 0-100 கி.மீ வேகத்தை 7.4 வினாடிகளில் எட்டிவிடும். இந்த சொகுசு காரில் இரண்டு ஆக்சில்களிலுமே டிபரன்ஷியல் லாக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் சேர்ந்து, ஆப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ற சிறந்த எஸ்யூவி ரக மாடலாக களம் இறங்கியுள்ளது. 241 மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. மேலும், 700 மி.மீ ஆழமுடைய நீர்நிலைகளையும் கடந்து செல்வதற்கான வசதிகளையும் பெற்றுள்ளது. ஏஎம்ஜி ஜி73 காரைவிட சிறப்பான ஆப்ரோடு பயன்பாட்டு அம்சங்களை பெற்றுள்ளது.

வலிமையான செவ்வக வடிவ கிரில் மற்றும் பம்பர் அமைப்பு, வட்ட வடிவ ஹெட்லைட் கிளஸ்ட்டர்கள், 21 அங்குல அலாய் வீல், ஸ்கிட் பிளேட், புட் போர்டு போன்றவற்றுடன் தன்னை ஒரு முழுமையான சொகுசு காராக முன்னிறுத்திக்கொள்கிறது. எல்இடி ஹெட்லைட், 12.3 அங்குல அளவிலான திரையில் இன்போடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளன. குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், 3 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, ஆம்பியன் லைட்டிங் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.8 ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், டிராக்க்ஷன் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகிய வசதிகளும் உள்ளன. இதன் ஏஎம்ஜி ஜி63 வெர்ஷன் ₹2.14 கோடியில் கிடைக்கும் நிலையில், இப்புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ ₹1.50 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

Tags : city ,Tirupur , 5 , selected industrial, city ,Tirupur
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்