×

கூண்டில் சிக்கிய சிறுத்தையை சீண்டி பார்த்த விவசாயி காயம்

துமகூரு: கர்நாடக  மாநிலம், துமகூரு மாவட்டத்தில் உள்ள மஞ்சுநாத்புரா கிராமத்தில் கடந்த சில  தினங்களாக சிறுத்தை ஒன்று புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதில்  அச்சம் அடைந்த கிராமத்தினர்  சிறுத்தையை பிடிக்க வனத்துறையினருக்கு  கோரிக்கை விடுத்தனர். கிராமத்தினரின் கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள்,  கிராமத்தில் இரும்பு கூண்டு அமைத்து அதில் இறைச்சியை கட்டி வைத்து  சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில்,  சம்பவத்தன்று இரவு கிராமத்துக்குள் நுழைந்த சிறுத்தை கூண்டில் இருந்த  இறைச்சியை சாப்பிட சென்றது. அப்போது, கூண்டில் சிக்கிக் கொண்டது. இது  குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு  வந்த அதிகாரிகள் சிறுத்தையை வனப்பகுதிக்கு எடுத்து செல்ல முயன்றனர்.

அப்போது அங்கு வந்த தாசனகட்டே கிராமத்தை சேர்ந்த விவசாயி ரமேஷ் என்பவர் சிறுத்தையின் அருகே சென்று அதை தொட்டு பார்க்க முயன்றார். மேலும்  மரக்கிளையை முறித்து  சிறுத்தையின் வாயில் விட்டு  விளையாடிக் கொண்டிருந்தார். இதில் ஆத்திரமடைந்த சிறுத்தை மரக்கிளையை வாயில் கடித்து இழுத்தது. இதில் நிலை தடுமாறிய விவசாயி மரக்கிளையுடன்  சேர்ந்து சிறுத்தை கூண்டில் சென்று மோதினார். அப்போது அவரது கையை சிறுத்தை  கடித்து பதம் பார்த்தது. இதில் அதிர்ச்சியடைந்த விவசாயி தப்பித்தோம், பிழைத்தோம் என்று அலறி பின்வாங்கி ஓடினார். மேலும் காயமடைந்த அவரை அரசு மருத்துவமனைக்கு அக்கம்பக்கத்தினர் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : Leopard, farmer, hurt
× RELATED டெல்லி வக்பு வாரிய பணி நியமன முறைகேடு...