×

இடைத்தேர்தல் வருவதை விரும்பவில்லை யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைக்க தயார்: முன்னாள் முதல்வர் குமாரசாமி அறிவிப்பு

பெங்களூரு: ‘‘சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் வருவதை மஜத விரும்பவில்லை. இதை  விட மாநில மக்களின் நலன் தான் முக்கியம்.  எனவே, மக்களின் நலனுக்காக  யாருடனும் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறோம்,’’ என முன்னாள் முதல்வர்  குமாரசாமி கூறினார். பெங்களூரு பிரஸ் கிளப்பில் நேற்று  பத்திரிகையாளர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர்  குமாரசாமி கலந்து கொண்டு பேசியதாவது: கர்நாடகாவில் தற்போதுள்ள நிலையில்  மாநில சட்டப்ேபரவைக்கு இடைத்தேர்தல் என்பது தேவையற்றது. மழை வெள்ள பாதிப்புகள் ஒரு புறம் இருக்க, மறுபுறம் மக்கள்  வறட்சியால் பாதிக்கப்பட்டு கர்நாடகாவில்  இயல்பு வாழ்க்கை வெகுவாக  பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும், வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள மக்களுக்கு  தேவையான நிவாரணப் பணிகளை செய்ய வேண்டிய நிலையில் அரசு உள்்ளது.

இது போன்ற இக்கட்டான காலக்கட்டத்தில், சட்டப்பேரவையை கலைத்துவிட்டு ஜனாதிபதி  ஆட்சியை அமல்படுத்தி, இடைத்தேர்தல் நடத்தினால், மாநில மக்கள் பெரும் அவதியை  சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே,  எடியூரப்பா தலைமையிலான ஆட்சி கவிழ மஜத ஒரு போதும் சம்மதிக்காது. சட்டப்பேரவைக்கு ஜனவரி அல்லது மார்ச்சில் இடைத்தேர்தல் வரும் என யூகிக்கப்படுகிறது. அது போன்று  ேதர்தலை சந்திக்க மஜத விரும்பவில்லை.  இதை விட மாநில மக்களின் நலன்தான் முக்கியம்.  எனவே, மக்களின் நலனுக்காக  யாருடனும் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Former ,CM ,Kumaraswamy ,alliance ,anyone ,chief minister , Kumaraswamy, by-election, former chief minister
× RELATED நடிகை கங்கனாவுக்கு எதிராக முன்னாள்...