×

ஆழ்கடலுக்கு சென்று மாயமானதாக கூறப்பட்ட குமரி மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: மீன்வளத்துறை இயக்குநர் தகவல்

சென்னை: ஆழ்கடலுக்கு சென்று மாயமானதாக கூறப்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் பத்திரமாக இருப்பதாக மீன்வளத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 4ம் தேதி கிட்டத்தட்ட சுமார் 850 படகுகளில் பல்வேறு மாநிலங்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்காக மீனவர்கள் சென்றனர். கடந்த 6 தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட புயல் எச்சரிக்கைக்கு பின்பு கிட்டத்தட்ட 8 படகுகள் போக மீதமுள்ள அனைத்து படகுகளும், அதிலுள்ள மீனவர்களும் பாதுகாப்பாக ஒவ்வொரு பகுதிகளாக கரையேறியுள்ளனர். ஆனால் இந்த 8 படகுகளில் உள்ள மீனவர்களின் நிலை என்ன? படகுகளுடைய நிலை என்ன? என்பது புரியாத புதிராக இருந்து வந்த நிலையில், அதிலுள்ள ஒரு படகு மீனவர்கள் தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருப்பதாக நேற்றிரவு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து 7 படகுகளும் அதிலுள்ள 92 மீனவர்களுடைய நிலைமையும் என்ன என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில்  7 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று மீன்வளத்துறை இயக்குநர் சமீரன் கூறியுள்ளார். காணாமல் போனதாக சொல்லப்பட்ட குமரி மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது என்றும், மாயமான மீனவர்கள் 300 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருப்பதை இந்திய கடற்படை உறுதி செய்துள்ளதாகவும் சமீரன் தகவல் தெரிவித்துள்ளார். மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய கப்பற்படை தமிழக அரசுக்கும், மீன்வளத் துறைக்கும் தகவல் அனுப்பி உள்ளது. ஆதலால் மாயமான மீனவர்கள் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : fishermen ,Director of Fisheries Information ,Kumari ,sea ,Director of Fisheries , Deep sea, magic, kumari fishermen, safe, Director of Fisheries
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...