×

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பெண்களின் எதிர்காலத்தை சீரழித்தவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்: ஸ்டாலின் அறிக்கை

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை சட்டப்படியும், அதிகார வர்த்தகத்தின் அழுத்தத்திற்கு ஆட்படாமல் நடக்க வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களின் எதிர்காலத்தை சீரழித்தவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பொள்ளாச்சி வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை தப்ப விடும் நோக்கில் காவல்துறை செயல்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளார். பொள்ளாச்சி வழக்கில் 2 பேர் மீதான குண்டாஸ் ரத்தாவதற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை தேவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து  சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்டோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து கோவை மாவட்ட ஆட்சியர் கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி திருநாவுக்கரசு தாய் பரிமளா, சபரிராஜன் தாய் லதா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், பாலியல் வன்கொடுமை வழக்கை உரிய சட்டத்தின் கீழ் தான் விசாரிக்க வேண்டும் எனவும், குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்து பிறப்பித்த உத்தரவை குடும்பத்தினருக்கு முறையாக தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு,  குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் உறவினர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை எனவும், ஆவணங்கள் தெளிவில்லாமல் இருப்பதாகவும் கூறி, இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைத்து கோவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை சட்டப்படியும், அதிகார வர்த்தகத்தின் அழுத்தத்திற்கு ஆட்படாமல் நடக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Tags : Stalin ,Pollachi , Pollachi, Sex Case, Thirunavukkumar, Sabarirajan, Thug Act, Cancellation, Stalin, Report
× RELATED தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும்...