×

மத்திய அரசு விருது அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: மத்திய அரசு விருது அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழ் மாநில காங். தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல், அபூர்வ ராகங்கள் தொடங்கி பேட்ட வரை சாதித்த நடிகர் ரஜினிக்கு வாழ்த்து என்றும், படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா எனவும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ட்விட்டரில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அன்பு நண்பர் ரஜினிக்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி, இதுபோல மேலும் பல விருதுகளை ரஜினி பெற வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Tags : Rajinikanth Political party ,leaders ,Rajinikanth ,actor , Central government, award, actor Rajinikanth, political leaders, congratulations
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...