×

ஜம்மூ-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி கைது

சோபூர்: ஜம்மூ-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளான். சோபூரில் இந்திய ராணுவம்-போலீஸ் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பிரிவு 370-ஐ ரத்து செய்ததோடு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு, கடந்த அக்டோபர் 30ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்த நடவடிக்கையால், ஜம்மு காஷ்மீரில் இன்னும் பத்தற்றமான சூழலே நிலவி வருகிறது. பல்வேறு கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் உள்ளனர். மத்திய அரசின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது. மேலும், பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ நிலைகள் மீது தொடர் தாக்குதலைகளை நடத்தினர்.

அதேபோல், காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். எல்லை பகுதிகளில் தீவிரவாத ஊடுருவல் தவிர்க்க தீவிர கண்காணிப்பு பணி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள்  நடத்திய தாக்குதலில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஜம்மு காஷ்மீரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து, ஜம்மு - காஷ்மீர், ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குல்காம் மாவட்டத்தில் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றன. முக்கிய நகரங்களில், பாதுகாப்பு படையினரின் ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையயே, லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

Tags : Lashkar-e-Toiba ,security forces ,Kashmir ,Jammu , Jammu and Kashmir, Security Forces, Hunting, Lashkar-e-Taiba, Terrorist, Arrested
× RELATED வாலிபர் கைது ரயில்வே பாதுகாப்பு படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு