×

இந்தியர்களின் வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டது மத்திய அரசுக்கு தெரியும்: வாட்ஸ் அப் நிறுவனம் தகவல்

புதுடெல்லி: இந்தியர்களின் வாட்ஸ் அப் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக கடந்த மே மாதமே அரசுக்கு தகவல் தெரிவித்ததாக வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி உளவு பார்க்கப்பட்ட தகவலை கடந்த மே மாதமே மத்திய அரசுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, இந்திய கணினி தாக்குதல் தடுப்பு அமைப்பான சி.இ.ஆர்.டி யிடம் உளவு பார்த்த தகவலை வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் பெகாசுஸ் என்ற மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதையோ, எந்த வகையில் தகவல்கள் திருடப்பட்டன என்பது பற்றியோ அதில் கூறவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள வாட்ஸ் அப் நிறுவனம் தனி நபர்களுக்கு வரும் தகவல்களை பாதுகாப்பதற்கே முன்னுரிமை தருவோம் என உறுதி அளித்துள்ளது.

மேலும் உளவு பார்த்தது தெரிந்த உடனே அந்த மென்பொருளை தயாரித்த என்எஸ்ஓ மீது வழக்கு தொடர்ந்ததையும் வாட்ஸ் அப் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ் கோவில் உள்ள நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் 20 நாடுகளில் வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியர்களை உளவு பார்த்தது தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனம் பதிலளிக்க மத்திய அரசு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கியிருக்கும் நிலையில், அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்திருக்கிறார். அதே நேரம் மத்திய அரசு நோட்டீஸுக்கு பதிலளிப்பது குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை. இதனை அடுத்து உலகம் முழுவதும் 1,400 பேரின் செல்போனில் உள்ள வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டது தெரியவந்துள்ளது.


Tags : Indians ,government ,Federal Government , Indians, Whats Up Information, Intelligence, Federal Government, Whats Up Company, Notification
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...