×

தீபாவளி பண்டிகை விடுமுறையில் விதிமீறிய ஆம்னிகளுக்கு 45.28 லட்சம் அபராதம்: போக்குவரத்துத்துறை கமிஷனர் தகவல்

சென்னை: தீபாவளிப்பண்டிகையின்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறிய ஆம்னி பஸ் நிர்வாகங்களிடமிருந்து 45.28 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது என தமிழக போக்குவரத்துத்துறை கமிஷனர் சமயமூர்த்தி தெரிவித்தார்.  கடந்த 27ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்டது. இதனால் சென்னையில் தங்கியுள்ள மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். பண்டிகைக்கு முந்தைய நாள் சனிக்கிழமையாக இருந்தது. மேலும் 24ம் தேதி முதல் பெரும்பாலான அலுவலகம், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.  இதன்காரணமாக பொதுமக்கள் அன்று இரவே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச்சென்றனர். இதற்காக அவர்கள் முன்னரே முன்பதிவு செய்திருந்தனர். ரயில்களில் விரைவாக டிக்ெகட் தீர்ந்து விட்டதால், பஸ்களையே பலரும் பயன்படுத்தினர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆம்னி பஸ்கள் கூடுதல் கட்டணம், ஆவணங்கள் இல்லாமல் பஸ்களை இயக்குதல், வரி செலுத்தாமல் பஸ்களை இயக்குவதாக போக்குவரத்துத்துறைக்கு புகார் வந்தது.

குறிப்பாக கடைசி நேரத்தில் விமான டிக்ெகட் கட்டணம் அளவுக்கு ஆம்னி பஸ்களில் கட்டணம் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து போக்குவரத்துத்துறை கமிஷனர் சமயமூர்த்தி 111 குழுக்களை அமைத்து உத்தரவிட்டார். இந்த குழுக்கள் பல்வேறு இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டது. அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறிய ஆம்னி பஸ் நிர்வாகங்களிடமிருந்து ரூ.45.28 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து போக்குவரத்துத்துறை கமிஷனர் சமயமூர்த்தி கூறியதாவது: தீபாவளிப்பண்டிகையின் போது விதிமுறைகளை மீறி ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறதா என்பது குறித்து 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சென்னை வடக்கில் 562 ஆம்னி பஸ்கள் சோதனையிடப்பட்டது. இதில் 78 பஸ்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மொத்தமாக 1,80,000 வசூலிக்கப்பட்டது.

இதேபோல் சென்னை தெற்கில் 1,737 பஸ்களில் சோதனையிடப்பட்டு, 506 பஸ்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இவர்களிடமிருந்து, 7,63,500 வசூலிக்கப்பட்டது; கோவையில் 578 பஸ்களில் சோதனையிடப்பட்டு, 334 பஸ்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இவர்களிடமிருந்து 7,62,000 வசூலிக்கப்பட்டது.  ஈரோட்டில் 822 பஸ்கள் சோதனையிடப்பட்டு, 158 பஸ்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இவர்களிடமிருந்து ₹7,62,000 வசூலிக்கப்பட்டது. மதுரையில் 225 பஸ்களில் சோதனையிடப்பட்டு, 64 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவர்களிடமிருந்து 1,03,500 வசூலிக்கப்பட்டது. சேலத்தில் 1,216 பஸ்களில் சோதனையிடப்பட்டு, 168 பஸ்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இவர்களிடமிருந்து ரூ.3,21,000 வசூலிக்கப்பட்டது. திருச்சியில் 1,200 பஸ்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 168 பஸ்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இவர்களிடமிருந்து 5,49,400 வசூலிக்கப்பட்டது.

தஞ்சையில் 683 பஸ்களில் சோதனை நடத்தப்பட்டு, 95 பஸ்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இவர்களிடமிருந்து 1,64,800 வசூலிக்கப்பட்டது. திருநெல்வேலியில் 1,208 பஸ்களில் சோதனையிடப்பட்டு, 322 பஸ்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இவர்களிடமிருந்து  8,05,000 வசூலிக்கப்பட்டது.  வேலூரில் 600 பஸ்களில் சோதனையிடப்பட்டு, 70 பஸ்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இவர்களிடமிருந்து 2,04,487 வசூலிக்கப்பட்டது. விழுப்புரத்தில் 881 பஸ்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 160 பஸ்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இவர்களிடமிருந்து 3,48,000 வசூலிக்கப்பட்டது. மொத்தமாக 9,712 பஸ்களில் சோதனையிடப்பட்டு, 2169 பஸ்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இவர்களிடமிருந்து மொத்தமாக 45,28,687  வசூல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் வரி செலுத்தாதது, எப்சி இல்லாதது, ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னை வடக்கு-3; கோவை-3; சேலம்-1; திருச்சி-1; வேலூர்-4, விழுப்புரம்-1 என மொத்தம் 13 பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Transport Commissioner ,holidays ,Diwali , Diwali Festival, Fines, Transport Commissioner
× RELATED ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு நடத்தி ரூ.57 லட்சம் மோசடி செய்த பெண் கைது