×

தனக்கு பிறகு கவனிக்க யாரும் இல்லாததால் விரக்தி மனநிலை பாதிக்கப்பட்ட மகன் தூக்கமாத்திரை கொடுத்து கொலை

* தற்கொலைக்கு முயன்ற தந்தைக்கு தீவிர சிகிச்சை
* ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு சம்பவம்

சென்னை: மனநிலை பாதிக்கப்பட்ட மகனை பார்த்துக்கொள்ள முடியாமல் தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்துவிட்டு, தந்தையும் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம்  ஆழ்வார்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை ஆழ்வார் தெரு திரிவேணி அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் விஸ்வநாதன் (82). சாஸ்திரி பவனில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் சுருக்கெழுத்தராக பணியாற்றி ஓய்வு  பெற்றவர். இவரது மகன் வெங்கட்ராம் (44), சிறு வயதில் இருந்ேத மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்தார். இதற்கிடையே விஸ்வநாதனின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.  அதன்பிறகு மகனை தனியாக பார்த்து வந்தார். வெங்கட்ராமனால் தனித்து எந்த செயலும் செய்ய முடியாது. இதனால் எப்போதும் அவருடன் ஒரு நபர் இருக்க ேவண்டும். எனவே, விஸ்வநாதன், வயது மூப்பு  காரணமாக மனநிலை பாதிக்கப்பட்ட மகனை பார்த்துக் கொள்ள முடியாமல் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் விஸ்வநாதன் வசித்து வந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அடுக்குமாடியில் குடியிருப்போர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார்  அளித்தனர். உடனே, போலீசார் அன்று இரவு திரிவேணி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள விஸ்வநாதன் வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீடு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. போலீசார் வீட்டின் கதவை உடைத்து  உள்ளே சென்று பார்த்த போது, படுக்கை அறையில் அழுகிய நிலையில் விஸ்வநாதன் மகன் வெங்கட்ராம் இறந்து கிடந்தார். அதன் அருகே விஸ்வநாதன் மயக்க நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.  இருவரின் அருகிலும் அதிகளவில் தூக்க மாத்திரைகள் சிதறிக்கிடந்தன. உடனே போலீசார் விஸ்வநாதனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்ைச பெற்று வருகிறார். பின்னர்  அழுகிய நிலையில் கிடந்த வெங்கட்ராம் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக பன்நோக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ைவத்தனர்.

மேலும், விஸ்வநாதன் ‘எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்களை பார்த்து கொள்ள யாரும் இல்லாததால் நானும் எனது மகனும் இந்த உலகத்தைவிட்டு செல்கிறோம்’ என்று எழுதி ைவத்த கடிதத்தை போலீசார்  கைப்பற்றினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விஸ்வநாதன், தனக்கு பிறகு மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனை யார் பார்த்துக்கொள்வார்கள். இதனால் தாம் உயிரோடு இருக்கும்  போது மகனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு ெசய்துள்ளார். அதன்படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே அதிக அளவில் தூக்க மாத்திரைகள் உணவில் கலந்து தனது  மகனுக்கு கொடுத்து கொலை செய்துள்ளார். பிறகு மனவேதனையில் இருந்த அவர் தானும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இருப்பினும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள  விஸ்வநாதன் கண்விழித்த பிறகுதான் முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : no one , Son, sleeping pill, murder
× RELATED சிஏஏ விவகாரத்தில் என்னை யாரும்...