×

வேலூரில் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை சந்திக்க அனுமதி கோரி நளினி மனு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி முருகனை அவரது மனைவி நளினி மற்றும் அவரது உறவினர்கள் சந்திக்க அனுமதிக்க கோரிய வழக்கில் தமிழக  அரசு பதில் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர் முருகன். இவர், சமீபத்தில் தனிமை சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முருகன் சிறையில் தொடர்  உண்ணவிரதம் இருந்து வருகிறார்.  இந்நிலையில், முருகனை தனிமை சிறையில் இருந்து விடுவிக்கக்கோரியும் அவரை மனைவி நளினி மற்றும் உறவினர்கள் சந்திக்க அனுமதிக்கக்கோரியும் முருகனின் உறவினர் தேன்மொழி என்பவர்  சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் முருகனை அவரது மனைவியோ உறவினர்களோ சந்திக்க சிறை அதிகாரிகள்  அனுமதிக்கவில்லை. எனவே, நளினி மற்றும் முருகனின் உறவினர்கள் அவரை சந்திக்க அனுமதியளிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.  இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்கா ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்குமாறு  தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Tags : Murukan ,Nalini ,Vellore Murugan , Vellore, Solitary Prison, Nalini Petition, Govt
× RELATED முருகன் பாஸ்போர்ட் பெற நேர்காணலுக்கு...