×

கேரள வன பகுதிகளில் மீண்டும் மாவோயிஸ்ட்கள் நடமாட்டமா?

கோவை: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மஞ்சகண்டி வனப்பகுதியில் கடந்த 28-ம் தேதி தண்டர்போல்ட் போலீசாருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 மாவோயிஸ்ட்கள்  கொல்லப்பட்டனர். காயமடைந்த 3 பேர் தப்பியோடி விட்டனர்.  இந்த சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என தண்டர்போல்ட் போலீசாருக்கு எதிராக பலியானவர்களின் உறவினர்கள் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து திருச்சூர்  மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 4 பேரின் உடல்களையும் தகனம் செய்ய ஐகோர்ட் தடை விதித்தது. இதற்கிடையே நேற்று காலை அதே பகுதியில் உள்ள வைத்திரி என்ற  இடத்தில் 2 மாவோயிஸ்ட்கள் துப்பாக்கி ஏந்தியபடி சுற்றி திரிந்ததாகவும், வன பகுதிகளில் மீண்டும் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ளதாகவும், போலீசாருக்கு ரகசிய தகவல் வந்ததாக தெரிகிறது.

அதனடிப்படையில் மாவோயிஸ்ட்டுகள் வன பகுதிகளில் எங்காவது பதுங்கியுள்ளனரா? என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார்  சோதனை செய்து வருகின்றனர்.  இந்நிலையில் தப்பியோடிய 3 மாவோயிஸ்ட்களின் நிலை என்ன ஆனது? என்பது குறித்த விவரம் வெளிவரவில்லை. எனவே அவர்களையும் போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : forest areas ,Kerala ,Maoists , Kerala Forest Area, Maoists
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...