×

புதுச்சேரியில் ஜான்குமார் எம்எல்ஏவாக பதவியேற்பு: சபாநாயகர், முதல்வர் வாழ்த்து

புதுச்சேரி:   புதுவை சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம், எம்.பி. ஆனதை தொடர்ந்து தனது காமராஜர் நகர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதியில் கடந்த 21ம்தேதி  இடைத்தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு 24ம்தேதி முடிவுகள் வெளியானது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் அமோக வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற ஜான்குமார் நேற்று காலை 8  மணிக்கு எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக் கொண்டார். சட்டசபையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.   

முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்பி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, திமுக அமைப்பாளர் (தெற்கு) எஸ்.பி. சிவக்குமார், மார்க்சிஸ்ட் முருகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள்  பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
 விழாவில் கவர்னர் கிரண்பேடி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி விடுதலை நாள்: இந்தியாவுடன் புதுச்சேரி இணைந்த தினமான நவம்பர் 1ம் தேதியை புதுச்சேரி விடுதலை நாளாக 2014 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. விடுதலை திருநாள் விழா கடற்கரை சாலையில்  நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் முதல்வர் நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றிவைத்து பேசினார்.

Tags : Jankumar ,MLA ,Puducherry ,Speaker , Puducherry, Jankumar MLA, Speaker, CM, congratulations
× RELATED புதுவையில் வாக்கு சேகரிப்பில்...