×

அரியலூரில் தமிழ்நாடு சிமென்ட்ஸ் நிறுவன வளாகத்தில் 809 கோடியில் சிமென்ட் தொழிற்சாலை: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: அரியலூரில் தமிழ்நாடு சிமென்ட்ஸ் நிறுவன வளாகத்தில் 809 கோடியே 9 லட்சத்தில் சிமென்ட் தொழிற்சாலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். முன்னாள் முதல்வர் ெஜயலலிதா கடந்த 2011-12ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அரியலூரில் உள்ள தமிழ்நாடு சிமென்ட் ஆலையின் உற்பத்தி திறனை 5 லட்சம் டன்னிலிருந்து 15 லட்சம் டன்னாக உயர்த்த  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.  அதன்படி, அரியலூர், தமிழ்நாடு சிமென்ட்ஸ் நிறுவன வளாகத்தில் ஆண்டொன்றுக்கு 10 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்ட  தொழிற்சாலையை முதல்வர் இந்த ஆலை 809  கோடியே 9 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 250 நபர்கள் நேரடியாகவும் 1000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர்.

மேலும், விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த சிமென்ட் உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றுவதற்காக, தெரிவு செய்யப்பட்ட7 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். மஞ்சளாறு அணையில் இருந்து நாளை முதல் நீர்திறப்பு: மஞ்சளாறு அணையிலிருந்து நாளை முதல் 135 நாட்களுக்கு முதல் போக விவசாய சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம்  மொத்தம் 5259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

காகித அட்டை ஆலை விரிவாக்கம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் மொண்டிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் அடுக்கு காகித அட்டை ஆலையின் விரிவாக்க திட்டத்துக்கு உலக முதலீட்டாளர்கள்  மாநாடு 2019-ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன் முதல்கட்டமாக, 1100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு 400 மெட்ரிக் டன் திறன் கொண்ட வன்மரக்கூழ் தயாரிக்கும் பிரிவு, ரசாயன மீட்பு  கொதிகலன் பிரிவு மற்றும் 20 மெகா வாட் திறன் கொண்ட மின்னாக்கி நிறுவுதல் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்தபடி  விரிவாக்க திட்டத்தின் முதல்கட்டமாக 1100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த ஆலை விரிவாக்க திட்டம் மொத்தம் 2,520 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கட்டங்களாக  செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் `மை ஸ்டாம்ப்’ என்ற தபால் தலையையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

Tags : Ariyalur ,premises ,Tamil Nadu ,Tamil Nadu Cement Company , Ariyalur, Tamil Nadu Cements Company, Factory, CM
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...