×

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு சென்னை என்.ஐ.ஏ. அலுவலகத்தில் கோவை வாலிபர்களிடம் விசாரணை

கோவை: தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கோவையை சேர்ந்த 2 வாலிபர்களிடம் சென்னை என்ஐஏ அலுவலகத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் சிலரின்  வீடுகளில் சோதனை நடத்த வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.  இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயம், நட்சத்திர ஓட்டல்களில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 253 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.  இந்த குண்டு வெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று கொண்டது. இவர்களுடன் தொடர்புள்ளதாக கடந்த ஜூனில் கோவையை சேர்ந்த முகமதுஅசாரூதீன்(32), ஷேக்இதயத்துல்லா(38),  அபுபக்கர்(29), சதாம்உசேன் (26), இப்ராகிம் என்கிற ஜாகின்ஷா(26) ஆகிய 5 பேரை என்.ஐ.ஏ. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் இந்தநிலையில் கொச்சியை சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் கோவை உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த அஷ்ரப் அலி மகன் சமீர் (22), உக்கடம் அண்ணாநகர் முதல் வீதியை சேர்ந்த எஸ்.கே.ஜான் மகன்  சவுரூதீன் (30) ஆகியோர் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 2 லேப்டாப், 2 செல்போன், 2 மெமரி கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்து சென்றனர்.

இதனைத்தொடர்ந்து அவர்களை சென்னை கிண்டியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் கொடுக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை சமீர், சவுரூதீன் ஆகிய 2 பேரும் கிண்டியில் உள்ள  என்ஐஏ அலுவலகத்தில் ஆஜாராகினர். இரண்டு பேரிடமும் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் எந்த வகையான தொடர்பு இருந்தது? ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம் எந்த  மாதிரியான தொடர்பு வைத்திருந்தார்கள்? ஏதேனும் சதி திட்டம் தீட்டியுள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.  இதேபோல், நாகையில் நேற்றுமுன்தினம் நாகூர் மியாந் தெருவில் முகமதுஅஜ்மல் என்பவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி செல்போன், மெமரி கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்து சென்றனர்.  இதைதொடர்ந்து 2வது நாளாக நேற்று நாகை அருகே சிக்கல் மெயின்ரோட்டை சேர்ந்த இஸ்மத்அலி(34), நாகை மஞ்சக்கொல்லை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த உமர்செரீப்(39), அதே பகுதியை சேர்ந்த ஜியாவுதீன்(40),  முகமதுஜெகபர்சாதிக்(31) ஆகிய 4 பேரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

Tags : Inquiry ,office ,Coimbatore ,co-workers ,Extremist organizations ,office Inquiry ,Chennai NIA , Terrorist Organization, Communication, Coimbatore Youth, Investigation
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...