ரவுடி கொலையில் முக்கிய குற்றவாளி கைது

அம்பத்தூர்: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், பெரியார் நகர், நேதாஜி தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (32). பிரபல ரவுடி. கடந்த 30ம் தேதி சந்தோஷ்குமார் வீட்டின் அருகே நடந்து வந்தபோது முன்விரோத தகராறில் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த பாம்பு தினேஷ்குமார் (26) வின்சென்ட் பால்ராஜ் (26), வெங்கடேஷ்குமார் (25),  சரண்குமார் (26), ஜீவன்பிரபு (19), பிராங்கிளின் (22), கணேஷ் (20) ஆகிய 7  பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.  மேலும் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் அதே பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (24) என்பவரை  போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். பின்னர்  அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Rowdy ,murder ,Main , Main suspect,Rowdy murder arrested
× RELATED பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி கொலை: பெரம்பூரில் பரபரப்பு