×

திருமணத்திற்கு பெண் பார்ப்பது போல் நடித்து 31 சவரன், 27 ஆயிரம் அபேஸ் :ஆசாமிக்கு வலை

திருவொற்றியூர்: மாதவரம் கே.கே.ஆர்.நகர் முதல் தெருவில் வசிப்பவர்  புவனேஸ்வரி (31). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த டேனியல் என்பவருக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.  இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், டேனியலுக்கும்,  புவனேஸ்வரிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த 2015ம் ஆண்டு  விவாகரத்து பெற்று, பிரிந்தனர். அதன்பிறகு, புவனேஸ்வரி தன் தாய்  லட்சுமி வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், விவாகரத்து பெற்ற புவனேஸ்வரிக்கு மறுமணம் செய்ய பெற்றோர் திட்டமிட்டு, தனியார் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தனர். அதனடிப்படையில், மீனம்பாக்கத்தை சேர்ந்த  ராஜேந்திரன்  (32) என்பவர், கடந்த மாதம் புவனேஸ்வரியின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தான் மீனம்பாக்கத்தில் கஸ்டம்ஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருவதாகவும்,  புவனேஸ்வரியை மறுமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும்,  கூறினார்.

தொடர்ந்து, கடந்த மாதம் 10ம் தேதி புவனேஸ்வரி வீட்டிற்கு வந்து, அவரை பெண் பார்த்து திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்து விட்டு சென்றார்.  பின்னர், ஓரிரு முறை புவனேஸ்வரியுடன் செல்போனில் பேசிய ராஜேந்திரன், கடந்த 29ம் தேதி திடீரென புவனேஸ்வரி வீட்டிற்கு வந்தார்.  அவரை புவனேஸ்வரியின் பெற்றோர் உபசரித்தனர். பின்னர், மாலையில்  ராஜேந்திரன் புறப்பட்டு சென்றுவிட்டார். அவர் சென்ற சிறிது நேரத்தில் புவனேஸ்வரி தனது அறையில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 32 சவரன் நகை, 27 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த செல்போன், ஏடிஎம் கார்டு ஆகியவை திருடு போயிருந்தது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். இதனால் சந்தேகமடைந்த புவனேஸ்வரியின் பெற்றோர், இதுகுறித்து மாதவரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அப்போது  தன் வீட்டிற்கு ராஜேந்திரன் வந்து சென்ற விவரத்தையும் கூறினர். போலீசார் புகாரை பெற்று, ராஜேந்திரனுக்கு போன் செய்தனர். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.  தொடர்ந்து, அவரை தேடி வருகின்றனர்.

Tags : Assamese , 31 Shaving, 27 Thousand Abs
× RELATED அசாம் மக்கள் நிலங்களை...