×

மனைவிக்கு கோணல் பல் தலாக் கொடுத்த கணவன் : போலீசார் வழக்குபதிவு

ஐதராபாத்: மனைவியின் பற்கள் சீராக இல்லாததால் முத்தலாக் கொடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம், ஐதராபாத் மாவட்டத்தில் உள்ள குஷாய்குண்டா பகுதியை சேர்ந்தவர் ருக்சனா பேகம். இவருக்கும் முஸ்தபா என்பவருக்கும் கடந்த ஜூன்  27ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில், ருக்சனாவின் பற்கள் கோணலாக இருப்பதாக கூறி முஸ்தபா, செல்போன் மூலமாக கடந்த வாரம் முத்தலாக் கொடுத்தார். இது குறித்து ருக்சனா ஐதராபாத் காவல் நிலையத்தில் கடந்த 26ம் தேதி புகார் தந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 எங்கள் திருமணத்தின்போது முஸ்தபாவும், அவரது குடும்பத்தினரும் பணம், நகை உட்பட பல்வேறு பொருட்களை வரதட்சணையாக கேட்டனர். அவர்கள் கேட்டவற்றை எனது குடும்பத்தினர் பூர்த்தி செய்தனர். ஆனால், திருமணத்துக்கு பிறகும் எனது கணவரும், அவரது சகோதரிகளும் கூடுதலாக நகை, பணம் கேட்டு என்னை சித்ரவதை செய்தனர்.

கடைசியாக முஸ்தபா, எனது பற்கள் சீராக இல்லாமல் இருப்பதாகவும், என்ன நடந்தாலும் என்னோடு வாழ முடியாது என்றும் கூறிவிட்டார்.
எனது கணவரின் குடும்பத்தினர் என்னை அறையில் வைத்து பூட்டி கொடுமைப்படுத்தினர். 10 நாட்களுக்கும் மேலாக அறையிலேயே இருந்ததால் எனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால், என்னை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி விட்டனர். போலீசில் புகார் ்அளித்ததால்,  கடந்த அக்டோபர் 1ம் தேதி வீட்டுக்கு வந்தகணவர், என்னை அழைத்து செல்ல மாட்டேன் என கூறியதோடு எனது பெற்றோரையும் தகாத வார்த்தைகளால் திட்டினார்.
கடந்த மாதம் 12ம் தேதி  எனது கணவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றேன். அப்போது என்னிடம் பேசிய அவர் போனிலேயே எனக்கு முத்தலாக் கூறிவிட்டார். இது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் அவர் கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் முஸ்தபா மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Tags : Husband , angular tooth talak, Police file case
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...