×

திறந்தவெளியில் ஆய் போன 20 குடும்பத்துக்கு ரேஷன் கட் : ஒடிசாவில் அதிரடி

பெர்ஹாம்பூர்: ஒடிசாவில் திறந்தவெளியில் மலம் கழித்த 20 குடும்பங்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்குவதை பஞ்சாயத்து நிறுத்தி வைத்துள்ளது. திறந்தவெளியை மக்கள் கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக, இலவசமாக கழிப்பிடம் கட்டிக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், பல ஆயிரம் கோடி செலவில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்கள் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக, கடந்த 2ம் தேதி திறந்தவெளி கழிப்பிடமில்லா நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கோதாமி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துபவர்கள் பிடிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கண்காணிப்பு பணியில் அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7மணியும்  சுய உதவி குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. அதில், சிக்குபவர்களின் குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படுகிறது. ஆரம்பத்தில் இதற்கு கிராம மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், ‘எல்லாம் நமது நன்மைக்கு தானே’ என பின்னர் மாறி விட்டனர். இருப்பினும், திறந்தவெளியை பயன்படுத்திய 20 குடும்பங்களுக்கு தற்போது ரேஷன் பொருட்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டு வருகிறது. அவர்கள் தங்கள் வீடுகளில் கழிப்பறையை கட்டினால் மட்டுமே மீண்டும் பொருட்கள் வழங்கப்படும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த பஞ்சாயத்து தலைவர் சுஷாந்த் சுஷாந்த் கூறுகையில், “எங்கள் பஞ்சாயத்தில் 2,000 வீடுகள் உள்ளன. 4,563 பேர் வசிக்கின்றனர். 180 வீடுகளில் தற்போது கழிவறை இல்லை. சிலர் கழிவறை கட்டும் பணியை தொடங்கி உள்ளனர்,” என்றார்.


Tags : Odisha ,families , Ration cut ,20 families , open air,Odisha
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை