×

பாலியல் தொழிலாளர்களுக்கு கோகைன் வாங்கி தந்த இந்திய வம்சாவளி எம்பி சஸ்பெண்ட் : இங்கிலாந்து நாடாளுமன்றம் அதிரடி

லண்டன்: இங்கிலாந்தில் ஆண் பாலியல் தொழிலாளர்களுக்கு கோகைன் போதை பொருள் வாங்க உதவிய, இந்திய வம்சாவளி எம்பி கேத் வாஸ் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பொதுச்சபையில் எம்பி.யாக இருப்பவர் கேத் வாஸ் (62). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவருடைய பூர்வீகம் கோவா. இவர், இங்கிலாந்து கிழக்கு லெய்செஸ்டர் தொகுதியில் இருந்து தொழிலாளர் கட்சி எம்பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இவர் கடந்த 1987 முதல் இங்கு எம்பி.யாக இருந்து வருகிறார். இந்நிலையில், ஆண் பாலியல் தொழிலாளர்களுக்கு கோகைன் போதை பொருளை வாங்க இவர் உதவி செய்ததை, தன்னார்வ கண்காணிப்பு அமைப்பு ஒன்று தகுந்த ஆதாரத்துடன் கண்டுபிடித்தது. இது பற்றி நாடாளுமன்ற குழுவின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், உடல்நிலையை காரணம் காட்டி, விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. இதனால், அவரை நாடாளுமன்றத்தில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யும்படி நிலைக்குழு பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில் இவரை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிடப்பட்டது.

இங்கிலாந்தில் டிசம்பர் 12ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் இவர் போட்டியிட உள்ளார். ஆனால், இந்த குற்றச்சாட்டின் காரணமாக அவரே போட்டியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என தொழிலாளர் கட்சி வலியுறுத்தி இருக்கிறது. இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டை கேத் வாஸ் மறுத்துள்ளார். இவர் ஓரினச்சேர்க்கையாளர் என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உள்ளது. தனக்கு பாதுகாப்பு அளித்து வந்த பாதுகாவலர் ஒருவருடன் ஓரினச்சேர்க்கை வைத்திருந்ததாக, கடந்த 2016ல் இங்கிலாந்து பத்திரிகைகள் பரபரப்பு செய்தியை வெளியிட்டன. அப்போது, தனது செயலுக்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : sex workers ,Indian ,UK Parliament Action , Indian-origin, MP suspended , cocaine, sex workers
× RELATED மலையாள சினிமா முன்னோக்கி செல்ல என்ன காரணம்? கமல்ஹாசன் விளக்கம்