மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சரிவு

மேட்டூர்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து சரிந்துள்ளது. நேற்று முன்தினம், விநாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 10 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. இதேபோல், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து சரிந்துள்ளது. நேற்று முன்தினம் 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, இரவு 8.30 மணியளவில் 7500 கன அடியாக சரிந்தது. 7500 கனஅடி தண்ணீர் அப்படியே பாசனத்திற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.


Tags : Mettur Dam ,slope , Mettur Dam, Water flow,slope
× RELATED மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி கால்வாயில் செத்து மிதக்கும் மீன்கள்