×

சுஜித்தை முறையாக மீட்கவில்லை எனக்கூறி செல்போன் டவரில் ஏறி போராட்டம் : குரோம்பேட்டையில் பரபரப்பு

தாம்பரம்: குரோம்பேட்டை நியூ காலனி 12வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (23). இவர் நேற்று மாலை சுமார் 5:30 மணி அளவில் குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்தின் அருகே உள்ள 100 அடி செல்போன் டவரின் மீது கருப்பு கொடியுடன் ஏறி, சுஜித்தை அரசு சிரியாக மீட்கவில்லை. மீண்டும் இதுபோன்ற ஒரு உயிரிழப்பு ஏற்படக்கூடாது எனவும், ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுந்தால் அவர்களை காப்பாற்ற உரிய கருவியை அரசு தயாரிக்க வேண்டும். மேலும், திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவலறிந்து பரங்கிமலை காவல் துணை ஆணையர் பிரபாகர் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தாம்பரம் தீயணைப்பு படை வீரர்கள் வந்து இளைஞருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர், இளைஞரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக போலீசார் உறுதி அளித்ததை அடுத்து, செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


Tags : Sujith , Sujith not recuperating , cell phone tower, struggle in Chrompet:
× RELATED செல்போன் டவர் அமைக்க இடம் கொடுத்தால்...