×

நேபாளத்தில் நிலநடுக்கம்

காத்மாண்டு: நேபாளத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.5 புள்ளிகளாக பதிவானது. அதிகாலை 3.41மணிக்கு மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர். காத்மண்டுவில் இருந்து 600 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பாக்லங் மாவட்டத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை.


Tags : Earthquake ,Nepal , Earthquake , Nepal
× RELATED மும்பையின் வடக்கு பகுதியில் லேசான நில அதிர்வு