×

கர்தார்பூர் குருத்வாராவுக்கு வரும் இந்திய சீக்கிய பக்தர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை : பாக். பிரதமர் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: ‘இந்தியாவில் இருந்து கர்தார்பூரில் உள்ள குருத்வாராவிற்கு வரும் சீக்கிய பக்தர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை,’ என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார். சீக்கிய மதத்தின் முதல் குருவான குருநானக் தேவின் நினைவாக, பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில், ‘தர்பார் சாஹிப் குருத்வாரா’ அமைந்துள்ளது. இதேபோல், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குர்தாஸ்பூர் மாவட்டத்தில் சீக்கிய புனித தலமான தேரா பாபா நானக் அமைந்துள்ளது. இரண்டு புனித தலங்களையும் இணைக்கும் வகையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே கர்தார்பூர் வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது. வரும் 9ம் தேதி இதன் திறப்பு விழா நடைபெறுகிறது.

இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள  பதிவில், ‘இந்தியாவில் இருந்து கர்தார்பூர் வரும் சீக்கிய பக்தர்களுக்கு  2 சலுகைகள் அளிக்கப்படுகிறது. ஒன்று, சீக்கிய பக்தர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை. இரண்டு, அடையாள அட்டை இருந்தால் போதுமானது.  10 நாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. குருஜியின் 550வது பிறந்த நாளன்று அவர்கள் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை,’ என்று கூறியுள்ளார்.

Tags : pilgrims ,Gurdwara Gurdwara ,Sikh ,Indian ,Pak ,announcement , Indian Sikh pilgrims , Gurdwara Gurdwara
× RELATED பாகிஸ்தானில் சீக்கியருக்கு அமைச்சர் பதவி