×

முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணியுடனான முதல் டி20 போட்டியில், இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
ஹேக்லி ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்தது. ராஸ் டெய்லர் அதிகபட்சமாக 44 ரன் எடுத்தார். செய்பெர்ட் 32, கோலின் மன்றோ 21, கிராண்ட்ஹோம் 19 ரன் எடுக்க, கப்தில் 2 ரன்னில் வெளியேறினார். டாரில் மிட்செல் 30 ரன், சான்ட்னர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து வென்றது. ஜேம்ஸ் வின்ஸ் 59 ரன் (38 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), பேர்ஸ்டோ 35, மாலன் 11 ரன் எடுத்து சான்ட்னர் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். கேப்டன் மோர்கன் 34 ரன், பில்லிங்ஸ் 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் வெற்றியை வசப்படுத்தினர். வின்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி வெலிங்டனில் நாளை நடக்கிறது.

Tags : England ,match ,T20 match , England win, first T20 match
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது