×

அரை இறுதியில் பிளிஸ்கோவா

ஷென்ஷென்: சீனாவில் நடைபெறும் டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார். ஊதா பிரிவு லீக் ஆட்டத்தில் சிமோனா ஹாலெப்புடன் (ருமேனியா) நேற்று மோதிய பிளிஸ்கோவா 6-0 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடிய ஹாலெப் 6-2 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் ஹாலெப்பின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த பிளிஸ்கோவா 6-0, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்று அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்தார். நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), ஆஷ்லி பார்தி (ஆஸி.), பெலிண்டா பென்சிக் (சுவிஸ்) ஆகியோரும் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

Tags : half ,semi-final , Pliskova , semi-final
× RELATED ஆண்டிபட்டி சிறுவன் அசத்தல்: இரண்டரை வயதிலேயே இந்தியச் சாதனையாளர்