×

இலங்கையுடன் டி20 தொடர் ஆஸ்திரேலியா ஹாட்ரிக் வெற்றி

மெல்போர்ன்: இலங்கை அணியுடன் நடந்த 3வது டி20 போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஆஸி. அணி முதலில் பந்துவீசியது. இலங்கை 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்தது. குசால் பெரேரா 57 ரன் (45 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), அவிஷ்கா பெர்னாண்டோ 20  எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். ராஜபக்ச 17 ரன், கேப்டன் மலிங்கா 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆஸி. பந்துவீச்சில் ஸ்டார்க், ரிச்சர்ட்சன், கம்மின்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 17.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்து வென்றது. கேப்டன் பிஞ்ச் 37, ஸ்மித் 13, மெக்டெர்மாட் 5 ரன்னில் வெளியேறினர். டேவிட் வார்னர் 57 ரன் (50 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), டர்னர் 22 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.ஆஸி. அணி ஹாட்ரிக் வெற்றியுடன் 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. தொடக்க வீரர் வார்னர் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.

Tags : Australia ,Sri Lanka ,hat trick , T20 series Australia, hat trick ,Sri Lanka
× RELATED மீண்டும் சதமடித்தார் ஸ்மித் 2வது...