×

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 30ஆம் தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்: தேர்தல் ஆணையர் அறிவிப்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 30ஆம் தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். நக்சல் பாதிப்புள்ள 32 தொகுதிகளில் வாக்குப்பதிவின் போது கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று ஆணையர் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக 13 தொகுதிகளுக்கு நவம்பர் 30ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 7ஆம் தேதி 2ஆம் கட்ட தேர்தல், டிசம்பர் 12ஆம் தேதி 3வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 16ஆம் தேதி 4ஆம் கட்ட தேர்தல், டிசம்பர் 20ஆம் தேதி 5ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது என்று ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலின் போது நாட்டிலேயே முதன்முறையாக வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்கப்படுகிறது என்று தேர்தல் ஆணையர் கூறியுள்ளார். அரசு ஊழியர்கள், ராணுவ வீரர்கள் மட்டுமே தபால் வாக்கு அளித்து வந்த நிலையில் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 81 தொகுதிகள் கொண்டுள்ள ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 30ஆம் தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரகுபர்தாஸ் தலைமையில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் விதி அமலுக்கு வந்தது.

Tags : state assembly elections ,Jharkhand ,Election , Jharkhand, Election
× RELATED ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர்...