×

தமிழகத்தில் ரூ.8,120 கோடி முதலீட்டில் 21 தொழில் திட்டங்களை செயல்படுத்த அனுமதி

சென்னை: பல்வேறு நிலைகளில் இருந்த 21 தொழில் திட்டங்களுக்கு ரூ.8,120 கோடி முதலீடுகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தலைமையில் நடந்த முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றை சாளர அனுமதிகளுக்கான கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் 21 தொழில் திட்டங்களின் மூலம் 16,000 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டங்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை,சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டுக்கல் மற்றும் திருச்சியில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Nadu , 21 Business Plans, Investment, Permission, Tamil Nadu
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...