×

டெல்லியில் தீவிர நிலைக்கு சென்ற காற்று மாசுப்பாட்டின் அளவு: நவம்பர் 5-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு மோசமடைந்து வரும் நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு அமைப்பு பொதுசுகாதார அவசரநிலையை பிரகடனப் படுத்தியுள்ளது. மேலும் நவம்பர் 5-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகையிலிருந்து தலைநகர் டெல்லியில் காற்று மாசுப்பாட்டின் அளவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு காற்று மாசின் அளவு மிகத்தீவிரம் அல்லது அவசரநிலை என்ற அளவுக்கு மோசமானது.

காற்று மாசு குறியீ்ட்டின் அளவு உச்ச பட்சமாக நள்ளிரவு 12.30 மணி அளவில் 582 புள்ளிகளைத் தொட்டது. இந்த ஆண்டில் முதல்முறையாக இதுபோன்ற மோசமான, நெருக்கடியான நிலையை அடைந்தது. ஆனால், இன்று காலை நிலவரப்படி காற்று மாசின் அளவு 459 புள்ளிகளை எட்டியுள்ளது. அந்த வகையில் நேற்று நள்ளிரவு 582 புள்ளிகளைத் தொட்டு இன்று காலை முதல் டெல்லியில் 450 புள்ளிகளுக்கு மேல் இருந்து வருகிறது.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள மாசுக்கட்டுப்பாட்டு அமைப்பு டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுசுகாதார அவசரநிலையை பிரகடனப் படுத்தியுள்ளது. இதனிடையே நிகழ்ச்சியொன்றில் பள்ளி மாணவர்களுக்கு சுவாச மாஸ்க்குகளை வழங்கிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியை கேஸ் சேம்பர் எனக் குறிப்பிட்டார். மேலும் ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வயல்களுக்கு தீவைப்பதை தடுக்கக் கோரி அம்மாநில முதல்வர்களை குறிப்பிட்டு கடிதம் எழுதுமாறு பள்ளி மாணவர்களை வலியுறுத்தினார்.

கட்டுமான பணிக்கு தடை


டெல்லியில் கட்டுமானப் பணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசு அபாய அளவை எட்டியதால் கட்டுமானப் பணி மேற்கொள்ள நவ.5ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.  காற்று மாசு தரக்குறியீடு 533 புள்ளிகள் என்ற அபாய கட்டத்தை எட்டியுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு மோசமடைந்து வரும் நிலையில் நவம்பர் 5-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகையிலிருந்து தலைநகர் டெல்லியில் காற்று மாசுப்பாட்டின் அளவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு காற்று மாசின் அளவு மிகத்தீவிரம் அல்லது அவசரநிலை என்ற அளவுக்கு மோசமானது. மாணவர்களின் நலன் கருதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Delhi ,schools , Delhi, air pollution, school, holidays
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு