அரியலூரில் ரூ.809 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட அரசு சிமெண்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை: அரியலூரில் ரூ.809 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட அரசு சிமெண்ட் ஆலையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் சிமெண்ட் ஆலையை அவர் திறந்து வைத்தார். சிமெண்ட் ஆலை மூலம் நேரடியாக 250 பேரும், மறைமுகமாக 1000 பேரும் வேலைவாய்ப்பு பெறுவர் என தெரிவித்துள்ளார். மேலும், புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலையில் ஆண்டுக்கு 10 லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படும் என தெரிவித்துள்ளார். அதேபோல மணப்பாறை மொண்டிபட்டியில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன விரிவாக்கத்திற்கும் அடிக்கல் நாட்டினார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தம் மூலம் காகித நிறுவனம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, ரூ.1,100 கோடியில் நாள்தோறும் 400 மெட்ரிக் டன் மரக்கூழ் உற்பத்தி செய்யும் பிரிவுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் பலவேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

Related Stories:

>