×

ராஜஸ்தான் அருகே பயிற்சியின் போது பீரங்கி வெடித்து விபத்து: ராணுவ வீரர் ஒருவர் பலி

பொக்ரான்: ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் அருகே பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பீரங்கி வெடித்து சிதறியதில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். பாலைவனப்பகுதியான பொக்ரானில் அமைந்துள்ள மாஹாஜன் ஃபீல்டு பயரிங் ரேஞ்ச் பகுதியில், டி -90 வகை பீராங்கியானது வழக்கமான பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள போக்ரான்  பாலைவனத்தில்  உள்ள இராணுவத்தின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய பயிற்சி பகுதியாகும்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த பீராங்கி வெடித்து சிதறியதில், அதிலிருந்த வீரர் பலியாகியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், வீரர் உயிரிழந்தது தொடர்பாக அவரது குடும்பத்தினருக்கு தகவலளிக்கப்பட்டதாகவும் ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து இறந்தவரின் குடும்பத்திற்கு ராணுவம் தகவல் தெரிவித்து உள்ளது.  இது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Tags : Artillery explosion ,soldier ,Rajasthan , Rajasthan, artillery, accident, soldier, killed
× RELATED ராஜஸ்தானுக்கு 5வது வெற்றி: பஞ்சாப் கிங்ஸ் ஏமாற்றம்