×

தென்கொரியா-ஜப்பான் இடையே கடலில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: தென்கொரியாவை சேர்ந்த 7 பேர் மாயம்..மீட்பு பணிகள் தீவிரம்!

டகேஷிமா: தென்கொரியா-ஜப்பான் இடையே உள்ள கடலில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் தென்கொரியாவை சேர்ந்த 7 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தென்கொரியாவில் இருந்து காயமடைந்த ஒருவரை தீயணைப்புத்துறையின் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் எச் 225 மூலம் டேகு என்ற பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு ஏற்றிச்சென்றுள்ளனர். அந்த ஹெலிகாப்டரில் காயமடைந்தவருடன் சேர்த்து 7 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில், அந்த ஹெலிகாப்டரானது டாக்டோ என்ற சிறிய தீவு அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து, கடலில் மாயமாகியுள்ள தென்கொரியர்கள் 7 பேரையும் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். 7 பேரையும் மீட்கும் பணிகளில் ஹெலிகாப்டர்கள், விசைப்படகுகள் மற்றும் 30 நீர்மூழ்கும் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், உயிர் பிழைத்தவர்களை மீட்கவும், காணாமல் போனவர்களை தேட முழு அளவிலான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் தென்கொரிய பிரதமர் லீ நக்-யோன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விபத்து குறித்து பேசிய மீட்புப்படை அதிகாரி சியோங் ஹோ-சீன், உள்ளூர் நேரப்படி சுமார் வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் இந்த ஹெலிகாப்டரானது காயமடைந்த மீனவர் ஒருவரை ஏற்றிச்சென்றுள்ளது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஹெலிகாப்டர் கடலில் விழுந்திருக்ககூடும் என எண்ணப்படுகிறது, என தெரிவித்துள்ளார். ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ள பகுதியானது சர்ச்சைக்குரிய பகுதியாகும். இந்த சிறிய தீவுக்கு டாக்டோ என்று பெயர் வைத்துள்ள தென்கொரிய, அதனை தனதாக கூறி கடலோர காவல்படைகளை கொண்டு பாதுகாத்து வருகிறது. அதே வேளையில், டகேஷிமா என்று அழைக்கப்படும் என்று அழைக்கப்படும் இத்தீவை தமது என்று ஜப்பானும் சொந்தம் கொண்டாடி வருகிறது.


Tags : South Korean ,helicopter crash ,survivors , Japan, marine, helicopter, crash, South Korea,survivors
× RELATED தொழிலாளர்கள் பணி நீக்கத்தை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்