×

நீட் தேர்வு முறைகேடு வழக்கு: திருப்பத்தூரைச் சேர்ந்த மருத்து மாணவர் முகமது இர்பானுக்கு நிபந்தனை ஜாமீன்

மதுரை: நீட் தேர்வு முறைகேடு வழக்கில் திருப்பத்தூரைச் சேர்ந்த மருத்து மாணவர் முகமது இர்பானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. தினமும் மதுரை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் முன்பாக காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. மருத்தவப்படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வில் முறைகேடு செய்ததாக திருப்பத்தூரைச் சேர்ந்த மாணவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி மாணவரின் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்ட.து.

அதில், நான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இளங்கலை மருத்துவம் பயின்றுவந்த நிலையில், நீட் தேர்வில் முறைகேடு செய்ததாகக் கூறி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். நான் எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்கவும் தயாராக இருக்கிறேன். ஆகவே இவற்றைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் விசாரித்தார். அப்போது நீட் தேர்வில் முறைகேடு எதுவும் செய்யவில்லை என்றும், சிபிசிஐடி விசாரணைக்கு திருப்பத்தூர் மாணவர் முழு ஒத்துழைப்பு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், நீட் தேர்வில் முறைகேடு நடந்ததற்கு மாணவரின் தந்தை தான் காரணம் என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். பின்னர், திருப்பத்தூர் மாணவருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். தினமும் காலை மதுரை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் முன்பு, திருப்பத்தூர் மாணவர் கையெழுத்திட வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. நேற்று இதே போல், நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் தருமபுரி மாணவிக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Mohammed Irfan , Need exam, abuse case, Tirupathur, medical student Mohammed Irfana, conditional bail
× RELATED நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த...