×

எடப்பாடியை தொடர்ந்து 10 நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 7-ம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்க புறப்படும் பன்னீர்செல்வம் 10 நாட்கள் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். சிகாகோ, வாஷிங்டன், ஹூஸ்டன் ஆகிய நகரங்களுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப்புற வளர்ச்சி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்ட முக்கிய துறைகள் ஓ.பி.எஸ் வசம் உள்ளது.

இதன் காரணமாக அமெரிக்க சுற்றுப்பயணத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டம் தொடர்பாக ஓ.பி.எஸ். ஆய்வு செய்கிறார். துணை முதலமைச்சருடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் செல்வதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீடுகளை ஈர்க்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் கடந்த ஆகஸ்டு மாதம் 28ஆம் தேதி 14 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

Tags : O. Panneerselvam ,state visit ,US ,trip ,Deputy Chief Minister , Deputy Chief Minister, O. Panneerselvam, US trip,
× RELATED ஜூன் 4ம் தேதிக்கு பின் அதிமுக, இரட்டை...