அரபிக்கடலில் உருவான 'மகா புயல்'விலகிச் செல்வதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பில்லை: இந்திய வானிலை மையம்

புதுடில்லி: அரபிக்கடலில் உருவான மகா புயல் விலகிச் செல்வதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மட்டும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என கூறியுள்ளது. நாளை மறுநாள் வடக்கு அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.


Tags : Arabian Sea ,Tamil Nadu ,Indian Ocean Meteorological Center , Big Storm, Tamil Nadu, Rain, No Chance, Indian Weather Center
× RELATED சீனா-பாக். கடற்படை கூட்டு பயிற்சி...