×

ஆர்டிஓ நேர்முக உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

திருவாரூர்:  திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா கீழவிடையல் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (50), தனது பாட்டி மங்களாம்பாள்  பெயரில் இருந்த 18சென்ட் நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தருமாறு திருவாரூர் ஆர்டிஓ அலுவலகத்தில் கடந்த 2011ல் மனு அளித்தார்.

இதற்கு ரூ.2 ஆயிரம் வாங்கியதாக அப்போதைய ஆர்.டி.ஓவின் நேர்முக உதவியாளர் தஞ்சாவூரை சேர்ந்த பாலகிருஷ்ணனை (50) 2011 மே 24ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்ைக திருவாரூர் தலைமை குற்றவியல் நீதிபதி விஜயகுமார் விசாரித்து பாலகிருஷ்ணனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.


Tags : interview assistant ,RTO ,prison , RTO, Interview Assistant, 2 years, imprisonment
× RELATED ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றுக்கு...