×

கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் உடலை அடையாளம் காண சகோதரிக்கு அனுமதி

மதுரை: கேரளாவில் சுட்டுக் ெகால்லப்பட்ட மாவோயிஸ்ட் உடலை அடையாளம் காண அவரது சகோதரிக்கு ஐகோர்ட் கிளை அனுமதியளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் கல்லக்காட்டுவலசு, குமாரபாளையத்தைச் சேர்ந்த அன்பரசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கேரள மாநிலம் அகழி வனப்பகுதியில் கடந்த 29ம் தேதி தண்டர்போல்ட் சிறப்பு படை போலீசாருக்கும், மாவோயிஸ்ட் அமைப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இதில், மாவோயிஸ்ட் மணிவாசகம் சுட்டுக் கொல்லப்பட்டார். இது போலீசாரால் அவரது சகோதரர் மகனான எனக்கு தெரிவிக்கப்பட்டது.

மணிவாசகத்தின் சகோதரி சந்திரா மற்றும் அவரது மனைவி கலா ஆகியோர் சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் கைது ெசய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த இருவரும் தான் மணிவாசகத்தின் இறுதி சடங்குகளை மேற்கொள்ள முடியும். ஆனால், கேரள போலீசார் சில தூரத்து சொந்தங்கள் மூலம் மணிவாசகத்தை அடையாளம் காணச் செய்து அடக்கம் செய்ய நினைக்கின்றனர். எனவே சந்திரா மற்றும் கலா ஆகியோருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கவும், இவர்களால் அடையாளம் கானும் வரை மணிவாசகத்தின் உடலை எரியூட்டக் கூடாது என்றும், இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கலா மற்றும் சந்திராவுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் தினேஷ்பாபு ஆஜராகி, ‘‘கேரளாவில் பிரேத பரிசோதனை முடிந்து விட்டது. கொல்லப்பட்டவர் மணிவாசகம் என்பதை அடையாளம் காண வேண்டியுள்ளது. அப்போது தான் உறுதி படுத்த முடியும்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் மற்றும் கேரளாவிலுள்ள மற்றொரு சகோதரியான லட்சுமி ஆகியோர் கொல்லப்பட்ட மணிவாசகத்தை அடையாளம் காண பாலக்காடு எஸ்பி அனுமதிக்க வேண்டும். அவரது உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தனர்.


Tags : sister ,perpetrator ,Maoist ,Kerala , Kerala, perpetrator , Maoist bodykilled, admitted , sister
× RELATED மாவோயிஸ்ட் நடமாட்டம் வன எல்லை வாக்கு சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு