×

மேட்டூர் அணையில் நீர்திறப்பு குறைப்பு

மேட்டூர்: கர்நாடகாவில் மழை குறைந்து அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 25 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று இரவு 7,500 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து நீர்மின் நிலையம் வழியாக 7,500 கனஅடி திறக்கப்படுகிறது.

கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு, நேற்று காலை முதல் 400 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.


Tags : Mettur Dam , Mettur Dam, Hydration, Reduction
× RELATED மேட்டூர் அணையில் இருந்து காவிரி...